இளம் பெண்ணின் கையில் முத்தமிட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரால் சர்ச்சை

dmk kiss vote candidate Coimbatore
By Jon Apr 03, 2021 11:10 AM GMT
Report

கோவையில் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்கு சேகரிப்பின் போது இளம் பெண் ஒருவர் கையில் முத்தமிட்டு திமுக.விற்கு வாக்களிக்க கோரிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி பெண்கள் குறித்து பேசியதும், திமுக எம்.பி ஆ.ராசா தமிழக முதலமைச்சர் குறித்து பேசியதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

தற்போது மேலும் ஒரு திமுக வேட்பாளர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளரான பையா கவுண்டர் தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்.

பையா கவுண்டர் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

இளம் பெண்ணின் கையில் முத்தமிட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரால் சர்ச்சை | Controversy Dmk Candidate Kissing Young Woman Vote

தொடர்ந்து ஒரு வீட்டில் இருந்த முதல் வாக்காளரான கல்லூரி மாணவி ஒருவரை பார்த்து யாருக்கு வாக்களிப்பாய் எனக் கேட்டார். அப்போது செய்வதறியாது திகைத்த அந்த மாணவி உங்களுக்கு தான் ஐயா என்று கூறினார். இதனை தொடர்ந்து யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த வேட்பாளர் மாணவியின் கையை பிடித்து முத்தமிட்டார்.

இதனால் அப்பகுதி மக்கள் உட்பட திமுக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். திமுக வேட்பாளரின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.