இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரே வருடத்தில் ரூ. 377 கோடி - புதுசா இருக்கே!

Japan
By Sumathi Sep 30, 2024 07:28 AM GMT
Report

இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரே வருடத்தில் நாடு ஒன்று ரூ. 377 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

இறந்தவர்களின் சாம்பல்

ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அங்கு சட்டப்படி, எரியூட்டப்பட்டவர்களின் சாம்பலையும்

இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரே வருடத்தில் ரூ. 377 கோடி - புதுசா இருக்கே! | Apan Ashes Of Dead In One Year Rs 377 Crore Profit

அதில் இருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக்கொள்ள முடியும். உயிரிழந்தவர்கள் உடலில் அணிந்தும், பொருத்தப்பட்டும் இருந்த தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் எரியூட்டப்பட்ட சாம்பலில் மிச்சமிருக்கும்.

நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்குமாம்?

நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்குமாம்?


பெரும் லாபம்

குறிப்பாக, தங்களின் பற்களை அடைக்க தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களை மக்கள் பயன்படுத்துவதால் அந்த உலோகங்களின் எச்சங்களும், எழுப்புகளில் இம்பிளாட் ஆக பொருத்தப்பட்டிருக்கும் டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களின் எச்சங்களும் சாம்பலில் அதிகம் மிஞ்சுகின்றன.

இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரே வருடத்தில் ரூ. 377 கோடி - புதுசா இருக்கே! | Apan Ashes Of Dead In One Year Rs 377 Crore Profit

இதனை ஜப்பானிய நகரங்கள் சேகரித்து விற்று பணமாக்குகின்றன. அதிலும், 97% சதவீத மயானங்களை அரசே நடத்தகுவதால் இதன் மூலம் அதிக லாபம் ஈட்டுகின்றன.

அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் அவ்வகை உலோகங்களை விற்று சுமார் 6.49 பில்லியன் யென் [சுமார் 377 கோடி ருபாய்] வரை சம்பாதித்துள்ளன.