கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ - 100 கணக்கான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பல்
கொடைக்கானல், கொழுமம் வனப்பகுதியில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது.
கோடை மாதம் தொடங்கி உள்ளதால், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்த வெப்பத்தால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயால் வனவிலங்குகள், காட்டை விட்டு வெளியேறும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
கொழுமம் வனப்பகுதி செங்குத்தாக இருப்பதால் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று காட்டுத் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டுத் தீ எரிந்து வருவதால் பொதுமக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத் தீயால் 100 கணக்கான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.