தொடரும் அதிமுக தலைமை பஞ்சாயத்து : இது நடக்கும் என சொல்ல முடியாது - கை விரித்த எடப்பாடி

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 22, 2022 11:47 AM GMT
Report

கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது என ஈபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடும் செய்திருந்தார்.

தொடரும் அதிமுக தலைமை பஞ்சாயத்து : இது நடக்கும் என சொல்ல முடியாது - கை விரித்த எடப்பாடி | Anything Can Ultimate General Assembly Eps

அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுகையில், பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்தே அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2017-ல் பொதுக்குழு தீர்மானம் மூலம்தான் அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டன.

அப்போது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது.

விதியை சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும்

கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் முடியும். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பப்படியே முடிவுகள் எடுக்கப்படும்.

கட்சி விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும். பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. பொதுக்குழுவில் எந்த முடிவு எடுக்கப்படலாம்.

பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு

நாளை கட்சி விதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பெரும்பான்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும். இது ஜனநாயக நடைமுறை, எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும்.

அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல, தடை கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.

தொடரும் அதிமுக தலைமை பஞ்சாயத்து : இது நடக்கும் என சொல்ல முடியாது - கை விரித்த எடப்பாடி | Anything Can Ultimate General Assembly Eps

சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் பொதுக்குழு கூட்டப்படுகிறது என்று பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் ஈபிஎஸ் தரப்பு காரசார வாதத்தை முன்வைத்தது.

இதுபோன்று, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூறுகையில், 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் வந்தது, அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன்.

பொதுக்குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது

23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை, இதுகுறித்து பொதுக்குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது.

எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும். வழக்கமான முறையில் பொதுக்குழு நடக்கலாம், தலைமையில் மாற்றம் கோரும் தீர்மானங்கள் கூடாது.

தொடரும் அதிமுக தலைமை பஞ்சாயத்து : இது நடக்கும் என சொல்ல முடியாது - கை விரித்த எடப்பாடி | Anything Can Ultimate General Assembly Eps

நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.  

பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறேன் : ஓ.பன்னீர்செல்வம்