அதிமுகவில் அராஜகப்போக்கு..தருமம் மறுபடியும் வெல்லும் - ஓபிஎஸ் கண்டனம்!
அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு உள்ளதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சத்தை அடைந்துள்ளது.
சர்வாதிகார, அராஜகப்போக்கு
ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இயற்ற வேண்டும் என்று எடப்பாடிபழனிசாமி உறுதியாக உள்ள நிலையில் இதற்கு ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபக்கத்திலும் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சென்னை வானகரத்தில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில்
ஓபிஎஸ் ட்வீட்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதேசமயம் பொது குழுவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,
— O Panneerselvam (@OfficeOfOPS) June 22, 2022
"மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
தருமம் மறுபடியும் வெல்லும்
மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள
செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில்
, "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம் - தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan