மீண்டும் கர்ப்பமான நடிகை அனுஷ்கா சர்மா? வைரலாகும் வீடியோ!
அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
அனுஷ்கா சர்மா
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்திய நட்சத்திர வீரரான விராட்கோலியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வாமிகா என்ற மகள் உள்ளார்.
தற்போது வாமிகாவிற்கு 2 வயதாகும் நிலையில், அனுஷ்கா சர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அனுஷ்கா கணவர் விராட் கோலி உடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அதில், அனுஷ்காவின் baby bump தெரிவதாக கூறி நெட்டிசன்கள் ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Is that a Baby Bump?? #AnushkaSharma gets spotted while walking around with husband #ViratKohli #BollywoodBubble pic.twitter.com/F6bu418znk
— Bollywood Bubble (@bollybubble) November 9, 2023
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் கோலி பிறந்தநாள் அன்று தனது 49வது சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்காமல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.