மனைவி அனுஷ்கா சர்மா உருக்கமான தகவல் - கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சி!
அனுஷ்கா சர்மா வெளியிட்ட தகவலால் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோலியின் சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசியாக கொல்கத்தாவில் 2019 நவம்பர் மாதம் 22 நடந்த எதிரான டெஸ்ட் மேட்சில் சதம் அடித்திருந்தார்.
இவர் 41 இன்னிங்ஸ் டெஸ்டில் சதம் ஏதும் அடிக்காததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விமர்சனத்திற்கும் ஆளாகி வந்த நிலையில் அவை அனைத்தையும் 40 மாதங்களுக்கு பிறகு கோலி அசத்தியுள்ளார்.
மனைவி பதிவு
மேலும், சமூக வலைளதங்களில் இன்றைய சிறப்பான ஆட்டம் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இதனையடுத்து நடிகையும் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதிலும், சிறப்பாக கோலி விளையாடியுள்ளார். இந்த பண்புதான் என்னை எப்போதும் ஈர்க்கும்’ என்று தெரிவித்து பதிவிட்டுள்ளார்.