தரையில் அமர வைக்கப்பட்ட விராட் கோலி; தொடாமல் ஆசி - வைரலாகும் வீடியோ!
சாமியார் மடம் ஒன்றில் விராட் கோலி வெறும் தரையில் அமர வைக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரவி வருகிறது.
விராட் கோலி
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இலங்கையுடன் மோதி வருகிறது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா, மகளுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்த விராட் கோலி புனித நகரம் என கூறப்படும் விருந்தாவனுக்கு சென்றுள்ளார். மேலும், பாபா நீம் கரோலியின் ஆசிரமத்திற்கு சென்று குடும்பத்துடன் தியானம் செய்துள்ளார்.
ஆன்மீக சுற்றுலா
அப்போது விராட் கோலி குடும்பத்தினர் வெறும் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அந்த சாமியார் தரிசன பொருட்களை தன் கையால் கொடுக்காமல் தன்னுடைய வேலை ஆட்கள் மூலம் விராட் கோலிக்கு வழங்கியுள்ளார்.
Vamika Kohli ? ?
— Cricket Insider (@theDcricket) January 6, 2023
She is so cute and looking like #ViratKohli#Virushka pic.twitter.com/rUfgeBuqmi
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத விராட் கோலி, அங்கிருந்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.