தோனியோட நட்பு கிடைச்சது எனக்கு வரம் சார் : மனம் உருகிய விராட் கோலி
உண்மையான அக்கறையுடன் என்னிடம் எப்போது பேசுபவர் தோனிதான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கோலி தோனி நட்பு
இந்திய அணியில் விராட் கோலி - தோனியின் நட்பு குறித்து நமக்கு தெரியும் தோனிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு குறித்து பேசும் அடிக்கடி மனம் திறக்கும் விராட் கோலி , தனது 34 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் தோனி குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.
அக்கறையான மனிதர் தோனி
நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என தோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.
மேலும் தோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் தோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என தோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.