"என்னை தூக்கு பார்ப்போம்" மனைவியிடம் சவால் விட்ட கோலி: வைரலாகும் காணொளி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தன்னுடைய பலத்தை நிரூபித்து இருக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. காதல் திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள்.
அது இணையத்தில் வைரல் ஆகிவிடும். முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தை வமிகாவுடன் அனுஷ்கா ஷர்மா முன்னே செல்ல பின்னால் விராட் கோலி அனைத்து பைகளையும் சுமந்து சென்ற புகைப்படம் வைரல் ஆனது. தற்போது, அனுஷ்கா சர்மா, விராட் கோலியை தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
விராட் கோலியை பின்னால் இருந்து தூக்குகிறார் அனுஷ்கா, பின்னர் மீண்டும் தூக்க சொல்லி விராட் கேட்க மீண்டும் தூக்குகிறார். இந்த காணொளி ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.