த்ரிஷா குளிக்கும் வீடியோ ரிலீஸ்.. அப்போவே அவங்க அதை செஞ்சிருக்கணும் - பிரபலம் ஓப்பன் டாக்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
திரையுலக பிரபலம் ஒருவர் நடிகை த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார், படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். அவர் பேசியதற்கு பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு" என்று காட்டமாக பதிலளித்தார்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து பேசினார். அதில் அவர், "த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதற்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான் போய் பொழப்ப பாருங்க என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மன்சூர் அலிகான் அவரது பொழப்பை பார்த்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது.
இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதேபோல்தான் பல வருடங்களுக்கு முன்பு த்ரிஷா தங்கியிருந்த ஒரு நட்சத்திர விடுதியின் குளியல் அறையில் கேமரா வைத்து அவர் குளிக்கும் வீடியோவை வெளியிட்டார்கள். அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும்.
அப்படி அளித்திருந்தால் கேமராவை வைத்தது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். அந்த வீடியோ பொய் என்று த்ரிஷா தரப்பு சொன்னாலும் டேமேஜானது அவரது பெயர்தானே.
அப்போதே நடிகர் சங்கம் களத்தில் இறங்கியிருந்தால் நடிகைகளுக்கு அதுபோன்று நடந்திருக்காது. இதோ இப்போது மன்சூர் அலிகானும் இப்படி பேசியிருக்கமாட்டார். கண்டிப்பாக அவரை நடிகர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video