நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் மன்னிப்பு - என்ன காரணம்?
அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜிஎஸ்டி
கோவை கொடிசியாவில் தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைக்கும் கலந்துரையாடல் நடந்தது.
அதில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசியது அதிக கவனம் பெற்றது. அதில், குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள்.
கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள் எனத் தெரிவித்தார். இதற்கு விளக்கமளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
தொழிலதிபர் மன்னிப்பு?
"ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்'' என்றார்.
இந்நிலையில், , "நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்." என்று எழுந்து நின்று கை கூப்பும் வகையிலான சீனிவாசனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், அதில் ஆடியோ சரியாக கேட்கவில்லை. சீனிவாசன் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.