மத்திய அமைச்சராகும் அண்ணாமலை..? தமிழக பாஜக தலைவர் பதவி இவருக்கா!
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல்
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்றுள்ளது. பாஜக மட்டும் தனித்து 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர்.
அண்ணாமலை
இதனிடையே பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரின் அழைப்பின் பேரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அண்ணாமலைக்கு ஒரு முக்கிய துறை கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு மாநில தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.