இனி சிக்ஸர்தான்; டஃப் பால்ஸ் எல்லாம் நயினார் பாத்துப்பாரு - குஷியில் அண்ணாமலை
எனக்கு இனி சிக்ஸ் அடிக்குறது தான் வேலை என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில் பேசிய அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு, கட்டுப்பாடு இருந்தது. இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும்.
எப்போதுமே அடித்து ஆடக்கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறது. இதனால் இன்னும் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும். இனி பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார். கூட்டணி பற்றி நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். அவர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றால் நயினார் நாகேந்திரன் அண்ணனிடம் பேசுங்கள் என்று சிம்பிளாக கூறிவிடலாம்.
சுதந்திரமாக செயல்படலாம்
இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். பவுன்சர்ஸ், ஃடப் பால்ஸ் எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்து கொள்வார். அவர் பிளிக் ஆடிக்கொள்வார். டிபென்ட் பண்ணி கொள்வார். இனி நாம சிக்ஸ் அடிப்பது தான் நமது வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்குவாரு'' என்றார்.
மேலும், டிடிவி, தினகரன் நேற்று மருத்துவமனைக்கு சென்றது குறித்து 2 நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அவரது இதயம் நல்ல இதயம் என்று தமிழக மக்களுக்கு தெரிந்து இருக்கும்.
நாங்கள் சொன்னால் ஏற்று கொள்வார்களா? என்பது தெரியவில்லை. இதயம் நன்றாக இருக்கிறது என அப்போலோ மருத்துவமனை சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறது என பேசியுள்ளார்.