உங்க அப்பா பேசுனத விட நா பேசிடல...! கனிமொழி விமர்சனம் - அண்ணாமலை பதிலடி

Smt M. K. Kanimozhi Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Jan 20, 2024 10:43 AM GMT
Report

தன்னை குறித்து விமர்சித்திருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

கனிமொழி விமர்சனம்

அண்ணாமலை " பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க" என்பது பெரும் சர்ச்சையாக தமிழ்நாடு அரசியல் களத்தில் எதிரொலித்து வருகின்றது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,

annamalai-replies-to-kanimozhi-in-controversy-

அண்மையில் பாஜக தலைவர் திரு.அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

இவை அரசியலின் தரத்தையே தாழ்த்தும் - அண்ணாமலையின் பேச்சு - கனிமொழி கடும் கண்டனம்

இவை அரசியலின் தரத்தையே தாழ்த்தும் - அண்ணாமலையின் பேச்சு - கனிமொழி கடும் கண்டனம்

அண்ணாமலை பதிலடி

இந்நிலையில், இதற்கு பதிலடியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை.

annamalai-replies-to-kanimozhi-in-controversy-

உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது. அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு,

பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க சர்ச்சை - என்ன பேசுனாலும் வன்மம் - அண்ணாமலை..!

பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க சர்ச்சை - என்ன பேசுனாலும் வன்மம் - அண்ணாமலை..!

தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்.