பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க சர்ச்சை - என்ன பேசுனாலும் வன்மம் - அண்ணாமலை..!
கொங்கு பகுதிகளில் வழக்காடு மொழிகளை பேசுவதற்கு தவறாக சொல்கிறார்கள் என அண்ணாமலை விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ளார்.
மகிழ்ச்சி
சென்னை வந்துள்ள நாட்டின் பிரதமரை கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கேலோ இந்தியா போட்டியை பிரதமர் மோடி வெற்றிகரமாக துவங்கி வைத்தார் என்று கூறி, அடுத்த சில நாட்களுக்கு பிரதமர் முழுமையான இறைப்பணியில் ஈடுபட உள்ளார் என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் ராமர் சென்ற இடங்களுக்கு சென்ற பின்னர், பிரதமர் அயோத்தி செல்ல உள்ளார் என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இந்தாண்டில் பிரதமர் தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளது தமிழ்நாடு பாஜகவினருக்கு உற்சாகமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
வன்மத்தை...
தொடர்ந்து பேசிய அவர், கொங்கு பகுதிகளில் பேசும் வழக்கில் பேசியத்தை தவறாக சொல்கிறார்கள் என்றும், பேச்சின் மீது பிரச்சனை இல்லை, அண்ணாமலை தான் பிரச்சனைகளாக பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கிறார்கள் என்று விமர்சித்தார்.
மாட்டிற்கு பால் பீச்சுவதில் பல் படாமல் செய்வதையே சுட்டிக் காட்டினேன் என்று விளக்கி கூறிய அண்ணாமலை, இதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பி, இதேபோன்று பதத்தை தொடர்ந்து நாளையும் பயன்படுத்துவேன் என்று உறுதிபட தெரிவித்து, தான் தெளிவாக உணர்ந்தே பேசியதாக தெரிவித்தார்.
தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டவர்கள் உளவியல் நிபுணர்களை சந்திக்க வேண்டும் என்று சாடி, எந்த வார்த்தை சொன்னாலும் வன்மத்தை கற்பிக்கிறார்கள் என்றும் இதை நெறியாளர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி,
நான் வழக்காடு முறையைத்தான் பயன்படுத்துகிறேன், அப்படி பேசுவதில் தவறில்லை, பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் தவறு என்று தெரிவித்து தான் இது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.