18 வயது வீட்டு பணிப்பெண் - திமுக MLA குடும்பத்தின் கொடூர செயல் - அண்ணாமலை கடும் கண்டனம்..!

Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Jan 18, 2024 01:40 PM GMT
Report

சென்னை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி வீட்டில் இளம் பெண்ணிற்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

18 வயது பெண்ணிற்கு..

இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூகவலைதளபதிவில், சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்,

annamalai-slams-dmk-mla-in-18-years-old-violence

சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது.

தமிழ் கடவுளுக்கு அவமதிப்பு..? காலணியுடன் காவடி எடுத்த அண்ணாமலை..!வலுக்கும் எதிர்ப்புகள்

தமிழ் கடவுளுக்கு அவமதிப்பு..? காலணியுடன் காவடி எடுத்த அண்ணாமலை..!வலுக்கும் எதிர்ப்புகள்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்..

மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.

annamalai-slams-dmk-mla-in-18-years-old-violence

உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.