தமிழ் கடவுளுக்கு அவமதிப்பு..? காலணியுடன் காவடி எடுத்த அண்ணாமலை..!வலுக்கும் எதிர்ப்புகள்

Tamil nadu BJP K. Annamalai Gayathri Raghuram
By Karthick Jan 17, 2024 05:00 AM GMT
Report

அண்மையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவடி எடுத்து ஆடும் புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் பெரும் வைரலானது.

கண்டனம்

என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

annamalai-insulted-god-by-taking-kavadi-with-shoes

அதன் ஒரு பகுதியாக தான், அவர் காவடி எடுத்து ஆடும் போது, அதில் காலணி அணிந்திருந்த்தாக தற்போது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

annamalai-insulted-god-by-taking-kavadi-with-shoes

இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மீக ஆதரவாளர் போல் பேசுகின்ற அண்ணாமலை அவர்கள் முருக கடவுளை அவமானப்படுத்துவது போலவும் லட்சக்கணக்கான முருக பக்தர்களின் மனது புண்படுவது போலவும் நடந்து கொண்டு இருப்பது வேதனைக்கு உரியது. விரும்பத் தகாதது என குறிப்பிட்டுள்ளார்.

காலணியோடு...

அதே போல, முன்னாள் பாஜக உறுப்பினரான காய்த்ரி ரகுராம் வெளியிட்டுள்ள பதிவில், காலணியோடு காவடி எடுக்கிறான். வன்மையாக கண்டிக்கிறோம் தமிழகடவுள் முருகன் பெருமானின் மிகவும் எல்லோரும் பயபக்தியுடன் செய்யும் சடங்கு இது..

தமிழ் கடவுளுக்கு அவமதிப்பு..? காலணியுடன் காவடி எடுத்த அண்ணாமலை..!வலுக்கும் எதிர்ப்புகள் | Annamalai Insulted God By Taking Kavadi With Shoes

பிஜேபி தமிழ் மக்களின் நம்பிக்கை அவமதிப்பு செய்யலாக கருத்தவேண்டும்.. அண்ணாமலை கத்துக்குட்டி இப்படி அவமதிப்பு செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும்..