இவை அரசியலின் தரத்தையே தாழ்த்தும் - அண்ணாமலையின் பேச்சு - கனிமொழி கடும் கண்டனம்
அண்மையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்திற்கு தொடர்ந்து தமிழ்நாட்டின் பிரபலங்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை கருத்து
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியை சுட்டிக்காட்டி, அந்நிகழ்ச்சியின் நெறியாளரை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார்.
அவர் தன்னுடைய விமர்சனத்தில், பாத்து பக்குவமா பல்லு படாம பாத்துக்க என்பது போல நெறியாளர் அமைச்சர் உதயநிதியிடம் கேள்விகளை கேட்டதாக குறிப்பிட்டு விமர்சித்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு கடும் கண்டனங்கள் பல தரப்பில் இருந்தும் எழுந்து வருகின்றது.
கனிமொழி கண்டனம்
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க பதிவில், அண்மையில் பாஜக தலைவர் திரு. @annamalai_k ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அண்மையில் பாஜக தலைவர் திரு. @annamalai_k ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 20, 2024
தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.