1 லட்சம் வாக்குகளை காணோம்; மறுபடி நடத்தனும் - அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!

Tamil nadu Coimbatore K. Annamalai Lok Sabha Election 2024
By Sumathi Apr 20, 2024 03:08 AM GMT
Report

 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஓட்டு பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

annamalai

இதில், கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பலரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக வேட்பாளரும்,

அண்ணாமலை ஜெயிக்கணும் - விரலையே வெட்டிக்கொண்ட தொண்டர்

அண்ணாமலை ஜெயிக்கணும் - விரலையே வெட்டிக்கொண்ட தொண்டர்

மறு வாக்குப்பதிவு?

கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலையும் அங்குள்ள அதிகாரிகளிடம் இது்குறித்த கேள்விகளை எழுப்பினர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

1 லட்சம் வாக்குகளை காணோம்; மறுபடி நடத்தனும் - அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு! | Annamalai Demanded That Re Polling Coimbatore

சுமார்1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்லடம், சூலூர் என பல இடங்களில் பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்கு செலுத்தி வருபவர்களுக்கு நிறைய இடங்களில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பெரிய அளவில் திட்டமிட்டு கோவையில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்களை இவ்வாறு நீக்கிஉள்ளனர். இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

உடனடியாக இதுதொடர்பான தரவுகளை சேகரித்து ஆவணமாக தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளருக்கு அளித்து வருகிறோம். இதை எல்லாம் தொகுத்து மனுவாக அளிக்க உள்ளோம். அந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரியுள்ளோம். தேர்தல் அதிகாரிகள் என்ன வேலைசெய்தனர் என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.