Sunday, Jul 13, 2025

அரசியலை விட்டு விலகத் தயார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

Tamil nadu BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Jiyath a year ago
Report

பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அரசியலை விட்டு விலகத் தயார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! | Ready To Quit Politics Says Bjp Annamalai

இந்நிலையில் கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும். எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன்.

மக்களவை தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு - அலறியடித்து ஓடிய மக்கள்!

மக்களவை தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு - அலறியடித்து ஓடிய மக்கள்!

விலகத் தயார்

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும்.

அரசியலை விட்டு விலகத் தயார் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! | Ready To Quit Politics Says Bjp Annamalai

தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளர்களுக்கு பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும். முழுமையாக இந்த தேர்தல் நேர்மையான அறம் சார்ந்த வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.