மக்களவை தேர்தல் - வாக்களித்த பிறகு த.வெ.க தலைவர் விஜய்யின் பரபரப்பு பதிவு!
அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

காலை முதலே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்
அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதனையடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

 அதில் "நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்ட்டுள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    