தமிழ்நாடு உட்பட 102 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் - வாக்களிக்க மறவாதீர்!!
ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் இன்று 102 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
மக்களவை தேர்தல்
நாட்டின் ஆளும் அரசு, பிரதமர், அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் இன்று முதல் துவங்கி பல கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக இன்று (ஏப்ரல் 19-ஆம் தேதி) துவங்கும் தேர்தல் வரும் ஜூன் 1-வரை நடைபெறுகிறது.
இன்று முதல் கட்டமாக தமிழகம் - புதுச்சேரி 40 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் தமிழகம் - 39, புதுச்சேரி - 1, அருணாச்சல பிரதேசம் - 2, அசாம்- 5, பீகார் 4, சத்தீஸ்கர் - 1, மத்திய பிரதேசம் - 6, மகாராஷ்டிரா - 5, மணிப்பூர் - 2, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, ராஜஸ்தான் - 12, சிக்கிம் - 1, திரிபுரா - 1, உத்தரப் பிரதேசம் - 8, உத்தரகாண்ட் - 5, மேற்கு வங்கம் - 3, அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 1, ஜம்மு - காஷ்மீர் - 1, லட்சத்தீவு - 1.
போட்டி
10 ஆண்டு ஆளும் பாஜக கட்சியின் தலைமையிலான NDA கூட்டணிக்கும், கூட்டணி கட்சிகளை ஒன்றிணைந்துள்ள INDI கூட்டணிக்கும் மத்தியில் தான் போட்டி நிலவுகிறது.
10 ஆண்டு சாதனை, மக்கள் பணி, மோடியின் தலைமை பொறுப்பு போன்றவற்றை NDA முன்னிறுத்தும் நிலையில், மணிப்பூர் கலவரம், நாட்டின் வேலையின்மை, தேர்தல் பத்திர விவகாரம், பணவீக்கம், அம்பானி - அதானி வளர்ச்சி, பல மாநில அரசுகள் கவிழ்ப்பு, கட்சிகள் உடைப்பு போன்றவற்றை முன்னிறுத்துகிறது INDI கூட்டணி.
மாநிலத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி. அதனுடன் பல சுயேட்சைகளும் போட்டியிடுகிறார்கள்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்கள் கையில். சிந்தியுங்கள் - சுற்றுவட்டாரத்தை கவனியுங்கள். வாக்கு என்பது கடமை அல்ல உரிமை. இப்பொது இல்லை என்றால் 5 வருடம் உங்கள் கையில் உங்கள் உரிமை இல்லை.
தவறாமல் வாக்களியுங்கள் - மற்றவர்களிடமும் வலியுறுத்துங்கள்.
You May Like This Video