Thursday, Jul 24, 2025

சிறையில் செந்தில் பாலாஜிக்கு ஓராண்டு; இதில் திமுகவுக்கு முப்பெரும் விழா ஒரு கேடா? விளாசிய அண்ணாமலை!

V. Senthil Balaji Coimbatore DMK BJP K. Annamalai
By Sumathi a year ago
Report

திமுகவின் முப்பெரும் விழா குறித்து அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

 முப்பெரும் விழா 

கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mk stalin - annamalai

அதில், கோவையில் வரும் ஜூன் 15 அன்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக முப்பெரும் விழா நடத்தவிருப்பதாக அறிந்தேன். முதலில், ஜூன் 14 அன்று நடத்தவிருப்பதாக முடிவு செய்யப்பட்ட இந்த விழா, பண மோசடி வழக்கில், திமுக முன்னாள் இலாகா இல்லாத அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அதே ஜூன் 14 நாளில்தான் என்பதால், நாற்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது என்பதையும் அறிந்தேன். வாழ்த்துக்கள். மின்சாரக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியும், நூதன முறையில் கட்டண உயர்வைக் கொண்டு வந்து,

அண்ணாமலை மீது கடும் கோபம்; அதனால் தான் அமித் ஷா கோவையில் வேலை கூட பார்க்கல..

அண்ணாமலை மீது கடும் கோபம்; அதனால் தான் அமித் ஷா கோவையில் வேலை கூட பார்க்கல..

சாடிய அண்ணாமலை 

கோவை பகுதி சிறு குறு தொழிற்சாலைகளை முடக்கி, பொதுமக்கள் வாழ்வாதாரத்தை அழித்தும், ஒரு துறை விடாது அத்தனை தொழில்துறைகளிலும் கமிஷன் கலெக்ஷன் என அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல்,

சிறையில் செந்தில் பாலாஜிக்கு ஓராண்டு; இதில் திமுகவுக்கு முப்பெரும் விழா ஒரு கேடா? விளாசிய அண்ணாமலை! | Annamalai Criticizes Dmks Mupperum Vizha Covai

கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல் மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா? என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில்,

பத்தில் ஒரு பங்கை திமுக அரசு நிறைவேற்ற முன்வந்தாலே, கோவையின் பல ஆண்டு கால ஏக்கம் தீரும். ஆனால், அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதனால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.