Saturday, Jul 12, 2025

அண்ணாமலை அப்பனே வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது..! அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்.!

Tamil nadu ADMK BJP K. Annamalai
By Karthick a year ago
Report

அதிமுக - பாஜக விமர்சனங்கள் அண்மைக்காலங்களில் கடுமையாகி கொண்டே தான் வருகின்றது.

ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

annamalai-cant-defeat-admk-says-rb-udhayakumar

அதற்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது என்று கூறி, பாஜகவுடன் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது என்றார்.

அவர்கள் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது...ஆனால்...? ஓபிஎஸ் தீர்ப்பு..! ஆர்.பி.உதயகுமார் அதிரடி

அவர்கள் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது...ஆனால்...? ஓபிஎஸ் தீர்ப்பு..! ஆர்.பி.உதயகுமார் அதிரடி

மேலும், அண்ணா, அம்மாவைப் பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து அவர்களுடன் இருக்க முடியாது என்ற ஆர்.பி.உதயகுமார் அதிமுக இயக்கத்தின் மதிப்பீடு அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று விமர்சனம் செய்தார்.

பாஜக அலுவலகத்தில் முகப்பில் இருந்த ராமர் படம்...தூரமாக எடுத்து வைத்த அண்ணாமலை..!

பாஜக அலுவலகத்தில் முகப்பில் இருந்த ராமர் படம்...தூரமாக எடுத்து வைத்த அண்ணாமலை..!

கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் அவருக்கில்லை என்று கூறி, தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும் என்று சுட்டிக்காட்டினார். மேலும், அண்ணாமலை லேகியம் விற்பவர் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் என சாடிய ஆர்.பி.உதயகுமார் அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

annamalai-cant-defeat-admk-says-rb-udhayakumar

இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை என்று கூறி, ஆண்டவனே வந்தாலும் அதிமுகவைத் தொட்டுப்பார்க்க முடியாது என்று தெரிவித்து, அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.