அவர்கள் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது...ஆனால்...? ஓபிஎஸ் தீர்ப்பு..! ஆர்.பி.உதயகுமார் அதிரடி
நேற்று ஓபிஎஸ் தரப்பு கட்சி கொடி மற்றும் கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உய்ரநீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் அதிரடி
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், ஓபிஎஸ் தரப்பினர் கட்சிக்கு தாங்களே உரித்தவர்கள் என கூறி நீதிமன்றத்தில் தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று கட்சி விவகாரம் குறித்தான மனுவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்னும் எத்தனை முறை மனு தாக்கல் செய்வீர்கள் என்று தனது கண்டனத்தை பதிவிட்டு ஓபிஎஸ் தரப்பு கட்சி பெயர் மற்றும் கொடியை பயனப்டுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், இன்று மேலும் ஒரு மேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஆர்.பி உதயகுமார் அதிரடி
அதற்கு பதிலளித்த அவர், அதிமுக பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்கள் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது, நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது என குறிப்பிட்டு, நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பதை போல ஒ.பி.எஸ் செயல்பட்டார் என விமர்சித்தார்.
தொடர்ந்து லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்தி வந்ததால் ஓபிஎஸ்'சால் மக்கள் குழப்பம் அடைந்தனர் என்ற அவர், தற்போது தெளிவான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அளித்ததால் மக்களுக்கு தெளிவான பாதை தெரிந்துவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.
இன்றைக்கு நியாயம், சத்தியம் வென்றுவிட்டது தொண்டர்கள் உற்காசத்துடன் உள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்து, அதிமுகவை விட்டு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய அதிமுக கதவு திறந்து இருக்கும் என்றும் ஆனால் எதிரிகள், துரோகிகளுக்கு அதிமுக இணைவதற்க்கான கதவு மூடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.