அண்ணாமலைக்காக அப்படி பண்ண முடியாது!! சேகர் சிறப்பாக செயல்படுகிறார் - செல்லூர் ராஜு!!
அறநிலைய துறையே தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இருக்காது என அண்ணாமலை கூறிய நிலையில், தற்போது அதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை கருத்து
திருச்சி ஸ்ரீரங்க பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தான் இந்து சமய அறநிலைய துறையின் கடைசி நாள் என தெரிவித்தார்.
இந்த கருத்திற்கு பதிலளித்திருந்த தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், எத்தனை ED மற்றும் IT ரைட்டுகள் நடத்தினாலும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடியாது என கூறினார்.
செல்லூர் ராஜு பாயிண்ட்
இந்நிலையில், தான் அண்ணாமலையின் கருத்து குறித்து பதிலளித்துள்ள அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலை சொன்னதற்காக அறநிலைய துறையை எல்லாம் கலைத்து விட முடியாது எண்டு கூறி, அறநிலைய துறை தொடர்நது செயல்பட வேண்டும் என் தெரிவித்தார்.
மேலும், பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் செயல்படுகின்றன என தெரிவித்து அமைச்சர் சேகர் பாபு சிறப்பாகவே செயல்படுகிறார் என்றும் கூறினார்.