எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் நடக்காது..!! சேகர் பாபு பதிலடி!!
ஆட்சி வந்தவுடன் இந்து அறநிலைய துறையே இருக்காது என அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை கருத்து
பாதயாத்திரியையின் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தான் இந்து அறநிலைய துறைக்கு கடைசி நாள் என்று கூறினார்.
அதே போல கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய கம்பரத்தையும் நீக்குவோம் என உறுதியாக தெரிவித்த அண்ணாமலையின் கருத்துக்கள் பெரும் வைரலாகி வருகின்றது.
சேகர் பாபு பதிலடி
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அண்ணாமலை எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், அதிகாரத்தில் இருந்து கையெழுத்திடும் வாய்ப்பை அவருக்கு மக்கள் மாட்டார்கள் என கூறினார்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் கோவில்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளை குறித்து பட்டியலிட்ட அவர், எத்தனை ED, IT ரைட் நடத்தினாலும், தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சிக்கு பாஜக வராது என உறுதிபட தெரிவித்தார்.