ஆட்சிக்கு வந்ததும் அறநிலைய துறையே இருக்காது...!! அண்ணாமலை உறுதி..!!
என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை அதிரடியான பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
அண்ணாமலை பாதயாத்திரை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றார். 9 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியை மக்களுக்கு எடுத்துக்கூறி மீண்டும் பிரதமர் மோடியே மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என பிரச்சாரத்தை அவர் தொடர்ந்து வருகின்றார்.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த ஶ்ரீரங்கம் மண்ணில் இருந்து பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது என குறிப்பிட்டு, ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ்ப் புலவர்களுடைய சிலைகள் வைக்கப்படும் என்று கூறினார்.
பெரியார் சிலையை அகற்றுவோம்
மேலும், திருவள்ளுவர் சிலை - சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் சிலை வைப்போம் என்று உறுதியாக கூறிய அவர், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய கம்பரத்தை நீக்குவோம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியில் அகற்றுவோம் என அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள் அதேபோல இந்து அறநிலையத்துறை என்கிற அமைச்சரவையும் இருக்காது என்றார்.