இந்த ஆடு நிறைய குட்டி போடும்.. அது கிடாக் குட்டிண்ணே..! அண்ணாமலை பயணத்தில் சுவாரஸ்யம்!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் பாதயாத்திரையின் போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் எண் மக்கள்' பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இதில் தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை விராலிமலை தொகுதியிலும் திங்கள் கிழமை மாலை கந்தர்வக்கோட்டை, இரவு புதுக்கோட்டையிலும் நடந்தது.
அப்போது கீழராஜ வீதி தொடங்கும் அண்ணா சிலை அருகே யாத்திரையை முடித்து அண்ணாமலை பேசினார். வழக்கம்போல் திமுகவை விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருந்த அண்ணாமலைக்கு, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் சார்பில் ஒரு செம்மறி ஆட்டு கிடாக்குட்டியை பரிசாக வழங்கினர்.
அது கிடாக்குட்டிண்ணே
அதனைப் பெற்றுக்கொண்ட அண்ணாமலை, அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து "இந்த ஆட்டுக்குட்டிக்கு சிவகாமி என்று பெயர் வைக்கிறேன். இதைக் கொண்டு போய் வளருங்க.
நிறைய குட்டி போடும். அதை வச்சு முன்னேறுங்க" என்று அண்ணாமலை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கீழே நின்ற பாஜக தொண்டர்கள் "அண்ணே அது கிடாக்குட்டிண்ணே இது குட்டி போடாது" என்று கூட்டமாக கத்தினர். இதைக் கேட்டும் கேட்காதது போல் அண்ணாமலை கடந்து சென்றார்.