பாஜக அலுவலகத்தில் முகப்பில் இருந்த ராமர் படம்...தூரமாக எடுத்து வைத்த அண்ணாமலை..!
சென்னை அமைந்தகரையில் இன்று, பாஜக தேர்தல் மாநில தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
அண்ணாமலை பங்கேற்பு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து அயராது உழைத்து வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி தேர்தல் பணிகள், என் மண் என் மக்கள் யாத்திரை என மாறி மாறி தொடர்ந்து உழைத்து வருகின்றார்.
இன்று, சென்னை அமைந்தகரையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதிலும் சென்னை வந்த அவர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது, அறையின் முகப்பில் ராமர் புகைப்படமும், கொஞ்சம் தள்ளி முருகன் போட்டோவும் வைக்கப்பட்டிருந்தது. முதலில் இரு படத்திற்கும் பூஜை செய்த அண்ணாமலை, முருகன் போட்டோ கொஞ்சம் தூரத்தில் இருப்பதை கவனித்தார்.
சற்றும் தாமதிக்காமல், ராமர் மற்றும் முருகன் போட்டோக்களை இடம் மாற்றி வைத்தார். பின்னர் இரு படத்திற்கும் உரிய மரியாதையை செய்து வழிபட்டார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல்கை வருகின்றது.