பெரியாரால் இல்லை; சீமான் கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டாரு - அண்ணாமலை நறுக்..
பெரியார் தொடர்புடைய வாதம் கூடுதலாக சென்றுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாதக பின்னடைவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது.
பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது.
அண்ணாமலை நறுக்..
ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன்.
யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.