டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது பெரும் அதிர்ச்சி - திருமா ஆதங்கம்!

Thol. Thirumavalavan BJP Delhi
By Sumathi Feb 08, 2025 05:55 AM GMT
Report

டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளது.

பாஜக முன்னிலை

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

thirumavalavan - modi

இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷி, முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா மற்றும் சோம்நாத் பார்தி ஆகியோர் பின்னடவை சந்தித்துள்ளனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

"டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமேயானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.

பெரியாரை மண் என சொன்ன சீமான் - உதயநிதி கொடுத்த நச் ரியாக்‌ஷன்!

பெரியாரை மண் என சொன்ன சீமான் - உதயநிதி கொடுத்த நச் ரியாக்‌ஷன்!

திருமா வருத்தம்

நியாயமான முறையில் டெல்லி தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுகோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து கலந்தாய்வு செய்ய வேண்டும்.

டெல்லியில் பாஜக முன்னிலை வகிப்பது பெரும் அதிர்ச்சி - திருமா ஆதங்கம்! | Thirumavalavan Shock About Bjp Leads In Delhi

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாறுவதற்கான திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.