அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை..இதுதான் சரியான தண்டனை -அன்பில் மகேஸ் எச்சரிக்கை!
தமிழகத்தில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாகப் புள்ளி விவரங்களின்படி மத்திய அரசு தெரிவித்திருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளையும், நினைவுப் பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,’’தமிழகத்தில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாகப் புள்ளி விவரங்களின்படி மத்திய அரசு தெரிவித்திருப்பதாகக் கூறினார். மேலும் கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி இன்னும் தரப்படாமல் உள்ளது என்று கூறினார்.

அரசுப் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு தோல்வி - அண்ணாமலை!
தொடர்ந்து அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கலந்தாய்வு கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
அன்பில் மகேஸ்
அப்படி இருந்தும், அரசுப் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார். மேலும் இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மைகளை விசாரணை செய்து வருகின்றனர்.
அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இரும்புக் கரம் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.