அமைதிப் பேரணி செல்லும் முதல்வர் ஸ்டாலின்..சென்னையில் போக்குவரத்து மாற்றம் -எங்கெங்கே தெரியுமா?

M K Stalin Tamil nadu Chennai
By Vidhya Senthil Feb 03, 2025 03:15 AM GMT
Report

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

  அண்ணா நினைவு தினம்

அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காலை 8 மணியளவில் முதல்வர் ஸ்டாலின்  தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

அமைதிப் பேரணி செல்லும் முதல்வர் ஸ்டாலின்..சென்னையில் போக்குவரத்து மாற்றம் -எங்கெங்கே தெரியுமா? | Anna Memorial Day Traffic Changes On Chennai

வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்துபுறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மினி பஸ் கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் மினி பஸ் கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

போர் நினைவுச் சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாகத் திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து 

கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு ராதா கிருஷ்ணன் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது.

அமைதிப் பேரணி செல்லும் முதல்வர் ஸ்டாலின்..சென்னையில் போக்குவரத்து மாற்றம் -எங்கெங்கே தெரியுமா? | Anna Memorial Day Traffic Changes On Chennai

வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை X திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாகச் செல்லலாம். மவுன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கித் திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.