Sunday, May 11, 2025

தமிழ்நாட்டில் மினி பஸ் கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

Tamil nadu Government of Tamil Nadu Chennai
By Karthikraja 3 months ago
Report

தமிழ்நாட்டில் மினி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மினி பேருந்து

பயணிகளின் சிரமத்தை பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத குறுகலான வழித்தடங்களில், மினி பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.

mini bus fare hike

இந்நிலையில் மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னையில் தனியார் மினி பேருந்துகள் - எந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையில் தனியார் மினி பேருந்துகள் - எந்த பகுதிகளில் தெரியுமா?

கட்டண மாற்றம்

முதல் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.4 கட்டணம், 4கி.மீ முதல் 6கி.மீ தொலைவுக்கு ரூ.5 கட்டணம், 6 முதல் 8 கி.மீ தொலைவுக்கு ரூ. 6 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 கி.மீ முதல் 10 கி.மீ வரை 7 ரூபாய், 10 கி.மீ முதல் 12 கி.மீ வரை 8 ரூபாய், 12 கி.மீ முதல் 18 கி.மீ வரை 9 ரூபாய், 18 கி.மீ முதல் 20 கி.மீ 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

tamilnadu chennai mini bus fare

இந்த புதிய கட்டணமானது மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றமானது ஏற்கனவே இருக்கும் பர்மிட்தாரர்களுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் பர்மிட் பெறுவோருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.