சென்னையில் தனியார் மினி பேருந்துகள் - எந்த பகுதிகளில் தெரியுமா?
சென்னையில் தனியார் சார்பில் மினி பேருந்துகள் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் மினி பேருந்து
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்து என பல வகையான பொதுப்போக்குவரத்து இருந்தாலும், பேருந்துகள் மட்டுமே சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.
சென்னையில் பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாதவழித்தடங்களிலும், மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிப்ரவரி மாதம்
இந்நிலையில் சென்னையில் தனியார் சார்பில் மினி பேருந்துகள் இயக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், அம்பத்தூர், ஆலந்தூர், மணலி ஆகிய பகுதிகளில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்து சேவை நடைமுறைக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.