இனி சென்னையில் ஏசி லோக்கல் ரயில் - எப்போது முதல் தெரியுமா?
சென்னை புறநகரில் இயக்கப்பட உள்ள ஏசி ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை புறநகர் ரயில்
சென்னையில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி என பல்வேறு வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் கல்லூரிக்கு செல்வோர், வேளைக்கு செல்வோர் என தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். இந்த வழித்தடங்களில் ஏசி ரயில் சேவை இயக்க வேண்டும் என மக்களிடையே நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது.
ஏசி ரயில்
இதனையடுத்து சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் சென்னைக்கு ஏசி வசதியுடன் கூடிய இரண்டு புறநகர் மின்சார ரயில் தயாரிக்கப்பட்டு வந்தது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில், தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் மற்றும் அறிவிப்பு பெரும் வசதி, அனைத்துப் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா ஆகிய வசதிகள் உள்ளது.
தற்போது ஒரு ரயில் தயாரித்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் வில்லிவாக்கம்,அம்பத்தூர், அரக்கோணம் ஆகிய வழித்தடத்தில் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வே சான்றிதழ் அளித்தவுடன் இந்த ரயில் பெட்டிகள் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும்.
🚨Chennai’s first 12 car AC suburban rail! 🚊
— Chennai Updates (@UpdatesChennai) January 17, 2025
pic.twitter.com/js2mUx5AxN
இது குறித்து பேசிய ரயில்வே அதிகாரி, 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள் வேளச்சேரி கடற்கரை ரூட்டில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது. ஏனெனில் அந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கும் வசதி உள்ளது. புறநகர் ஏசி ரயில்களில் 10 கி.மீ வரை ரூ.29 கட்டணமாகவும் 11-15 கி.மீ தொலைவுக்கு ரூ.37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ரூ.65 கட்டணமும் நிர்ணயிக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.