கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - அதிகாரிகள் சொன்ன குட் நியூஸ்
கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ரயில் நிலையம்
இந்நிலையில் அதிகளவிலான மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், மக்களின் வசதிக்காக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 3 நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.20 கோடி வழங்கியுள்ளது.
ஏற்கனவே ஒரு நடைமேடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 நடைமேடை கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. சாலையின் எதிர்புறம் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்க ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரயில் நிலையம் வரும் மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.