பார்ட்டி, தோழினு அமர்க்களப்படுத்திய விஜயகுமார் மகள் - சினிமா பக்கமே வராத காரணம் இதுதான்!
விஜயகுமாரின் மகள் அனிதா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். அவரது மகள் தியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
50வது பிறந்தநாள்
இதற்கிடையில், சென்னையில் புதிதாக பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். வீட்டின் கிரஹப்பிரவேசத்துக்கு குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். இந்நிலையில், அவரது 50-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அனிதாவின் பிறந்தநாளுக்காக அவரது அக்கா கவிதா அமெரிக்காவில் இருந்து ஜார்ஜியா சென்றிருந்தார். மேலும், இந்தியாவிலிருந்து அவரது தோழிகள் மற்றும் நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது, அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.