50 வயசு; சினிமா பக்கமே வரல; வீடு இல்லை அது அரண்மனை - மகளுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் மகள்!

Arun Vijay
By Sumathi Sep 11, 2023 11:11 AM GMT
Report

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

அனிதா விஜயகுமார் 

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

50 வயசு; சினிமா பக்கமே வரல; வீடு இல்லை அது அரண்மனை - மகளுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் மகள்! | Anitha Vijayakumar Big House Tour Viral

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். அவரது மகள் தியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

வைரல் வீடியோ

இதற்கிடையில், சென்னையில் புதிதாக பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். வீட்டின் கிரஹப்பிரவேசத்துக்கு குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்.

இந்த வீட்டில் நீளமான அறைகள், தனியான தியேட்டர், பிரம்மாண்ட பெட்ரூம், என்று மிகவும் பெரிய வீடாக உள்ளது. இந்த வீட்டின் அம்சங்கள் இடம்பெறும் வீடியோவை அவரது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. அனிதா விஜயகுமார் இதுவரை திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

You May Like This Video