மீண்டும் ரகசிய திருமணம்;விவாகரத்துக்கு வாய்ப்பில்லை - வனிதா விஜயகுமார் அதிர்ச்சி தகவல்!
மீண்டும் திருமணம் செய்துக் கொண்டதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார்
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் தந்தையுடன் வசித்து வருகிறார். அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும் திருமணம்
இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை. தொடர்ந்து, 2020ல் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். அவர் அண்மையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், ”நான் என்னுடைய சினிமா வாழ்க்கையை தான் காதலிக்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கையை நான் இப்போது மீண்டும் திருமணம் செய்து இருக்கிறேன்.
இனி இதிலிருந்து விவாகரத்துங்கிற பேச்சுக்கே இடம் இல்லை. இனி நான் என்னுடைய நடிப்பை தொடர்ந்து கொண்டு இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.