அந்த தெருவில் ஆளே இல்லை.. 2 பசங்க வேற, ஆட்டோவில் நடந்த கொடுமை - அனிதா சம்பத் ஓபன்டாக்!
அனிதா சம்பத் தான் சந்தித்த நிகழ்வுகள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அனிதா சம்பத்
பிரபல செய்தி வாசிப்பாளராக அறியப்பட்டவர் அனிதா சம்பத். அதன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் நியூஸ் 7 நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன். ஏறிய பிறகு, அந்த ஆட்டோ ஓட்டுநர் என்னை பார்த்து அம்மா உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று கேட்டார். ஆமா அண்ணா, நான் செய்தி வாசிப்பாளராக டிவியில் வேலை செஞ்சிட்டு இருக்கேன் என்று கூறினேன்.
நீங்கள் சன் மியூசிக்கில் வரக்கூடிய மணிமேகலை தானே? என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதில் கொடூரம் என்னவென்றால் இன்னும் எத்தனை பேர் இது போல நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே என இருந்தேன்.
வேதனை பகிர்வு
பிறகு ஒரு நாள் அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு இளைஞர்கள் வண்டியில் வந்து அருகில் நிறுத்தினார்கள். அதில் ஒருவர் வேகமாக இறங்கி மேடம் உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கணும் என கேட்டான். அந்த பையனை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
ஆள் பார்ப்பதற்கு ரவுடி போல இருந்தான். அந்த தெருவிலும் யாரும் இல்லை. என்ன செய்வது? என்று தெரியாமல் இருந்தேன். அவனுடைய நண்பனிடம் டே.. சீக்கிரம் வாடா.. சன் மியூசிக் மணிமேகலை வந்து இருக்காங்க செல்பி எடுத்துக்கலாம் என்று அழைத்தான்.
அதன் பிறகு அவனிடம் தெளிவாக கூறிவிட்டு நான் மணிமேகலை கிடையாது செய்தி வாசிப்பவர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து நடந்து வந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.