குழந்தை இல்லை?.. இப்போதான் நிம்மதியா இருக்கு - பதில் கொடுத்த அனிதா!

Tamil Cinema Anitha Sampath Tamil Actress
By Vinothini Nov 08, 2023 06:30 PM GMT
Report

நடிகை அனிதா குழந்தை இல்லை என்பது குறித்த கேள்விக்கு பதில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

அனிதா சம்பத்

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் தனது வேலையை விட்டுவிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ஓவராக பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

anitha sampath

இவருக்கு பல எதிர்ப்புகள் வந்தது, ஆனாலும் அதன்பிறகு டாஸ்கில் நேர்மையாக விளையாடியதால் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு இருந்தது.

பின்னர் பிக்பாஸ் ஜோடிகளின் நடித்து வெற்றிபெற்றார், அதில் இவருக்கு ரசிகர்கள் கூடினார்ட்கள். தற்பொழுது இவர் யூடியூப் சேனல் தொடங்கி அதில், அழகு பராமரிப்பு, வீட்டுக்குறிப்பு என பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க? - ஐஷுவை ரோஸ்ட் செய்த சுசித்ரா!

தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க? - ஐஷுவை ரோஸ்ட் செய்த சுசித்ரா!

நடிகை பதில்

இந்நிலையில், இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது என்றாலும் கூட இதுவரை இவருக்கு இன்னும் குழந்தை இல்லை. இது குறித்து நடிக்க அனிதா சம்பத் பெரிதாக எங்கும் பேசியதில்லை. தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளத்தில் பிரபலமாக இருக்கும் Poli Couple என்ற பெயரில் இயங்கக்கூடிய தம்பதியினர் கேளிக்கையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகின்றனர்.

சமீபத்தில் கோழி முட்டை போட்டதா ஆண்ட்டி.. கோழி முட்டை போட்டதா ஆண்ட்டி.. என்று ஒரு ஆண்டியிடம் தினமும் சென்று நச்சரிப்பது போலவும்.. இதனால் கடுப்பான அந்த ஆண்ட்டி கோழி முட்டை போடும்போது தான் போடும்.. தினமும் போடுமா..? என்று கூறுவார்.

anitha sampath

அந்த நேரத்தில், அதேபோல நாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது பெற்றுக் கொள்வோம்" என்று கூறுவர். இந்த வீடியோவிற்கு இதனைப் பார்த்து அனிதா சம்பத். இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்.

You May Like This Video