பாடகி அனிதா குப்புசாமிக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்
தனக்கு பிறந்த ஆண் குழந்தை பிறந்த உடன் உயிரிழந்ததாக ஐபிசி பக்திக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
கண் கலங்கிய அனிதா குப்புசாமி
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், யாருக்கும் தெரியாத உண்மையை சொல்வதாக கூறிய அவர், தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும்,
தனக்கு முதலில் பல்லவி என்ற பெண் குழந்தை பிறந்ததாகவும், பின்னர் 2வது குழந்தையாக ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்ததாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், ரொம்ப அழகான குழந்தை கலர் என்றால் அப்படி ஒரு கலர், எனக்கு சிசேரியன் செய்யப்பட்டு பிறந்த குழந்தை அது.
நான் மயக்கத்தில் இருந்தேன் அப்போது மருத்துவர்கள் தவறான ஊசி செலுத்தி நெஞ்செல்லாம் எரிந்து குழந்தை இறந்துவிட்டதாக கண்கலங்க தெரிவித்தார்.
இதே அவர் பேசிய முழு வீடியோ...

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.