இனி ரூ.99-க்கு மது வாங்கலாம்; அமலாகும் புதிய கொள்கை - எங்கு தெரியுமா?
மதுபான பாட்டில் இனி வெறும் ரூ.99-க்கு வாங்கலாம்.
புதிய மதுபானக் கொள்கை
ஆந்திராவின் புதிய மதுபானக் கொள்கை அக்டோபர் 12, 2024 முதல் அமல்படுத்தப்படுகிறது. 3,736 தனியார் சில்லறை விற்பனைக் கடைகள் மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படும்.
இதன் மூலம், 180 மில்லி லிட்டர் மதுபான பாட்டிலை வெறும் ரூ.99-க்கு வாங்கலாம். மேலும், மதுக்கடைகள் இன்னும் மூன்று மணிநேரம் கூடுதலாக திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அரசு முடிவு
தனியார் நிறுவனங்களுக்கு மதுபானங்களை சில்லறை விற்பனை செய்ய அனுமதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் இருந்து ரயிலில் பயணம் செய்தால், 2 லிட்டர் மதுபானம் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.
காரில் பயணம் செய்தால், நீங்கள் ஒரு லிட்டர் மதுபானம் கொண்டு வரலாம். இதை மீறினால் ரூ.500 அபராதமும், 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இந்த புதிய கொள்கையின் மூலம் ரூ.2,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.