விற்பனைக்கு வருகிறதா 100 மில்லியில் மது பாட்டில்?
தமிழக அரசின் 100 மில்லி பாட்டிலில் மது விற்பனை செய்ய குறித்து தமிழக அரசு பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
மது விற்பனை
தமிழகத்தில் மது பழக்கம் அதிகரித்து, பலரும் மதுவிற்கு அடிமையாகி இருப்பதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில், மாநிலத்தின் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
மரண எண்ணிக்கை 60'ஐ தாண்டியுள்ளது. மது விற்பனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் போதிலும், கள்ளச்சாராயம் பக்கம் மக்கள் செல்வதை தடுக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
100 மில்லி
விலை உயர்வின் காரணமாக தான், மக்கள் கள்ளச்சாராயம் பக்கம் செல்கிறார்கள். இந்நிலையில் தான் விலை குறைந்த 100 மில்லி பாட்டில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரூ.15'க்கு இந்த 100 மில்லி மது பாட்டில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 2001-இல் கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்த நிலையில். அப்போது 100 மில்லி ரூ.15'க்கு விற்பனை இருந்தது குறிப்பிடத்தக்கது.