டெட்ரா பேக்கில் 90மி.லி மது விற்க முடிவு - டாஸ்மாக் முக்கிய தகவல்!

Tamil nadu TASMAC
By Sumathi Jul 02, 2024 05:21 AM GMT
Report

90 மி.லி. மதுவை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் முடிவு குறித்து டாஸ்மாக் தகவல் வெளியிட்டுள்ளது.

டெட்ரா பேக்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டில்களில் தான் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தற்போது முதன் முதலில் 90 மி.லி மது டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.

tasmac

கள்ளச்சாராயத்தைத் தடுக்கவே டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக இணையத்தில் பேசப்பட்டது. இதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையா..? துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்!

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லையா..? துரைமுருகனுக்கு பிரேமலதா கண்டனம்!

 

டாஸ்மாக் தகவல் 

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 90 மி.லி. மதுவை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் எந்த முடிவும் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை.

டெட்ரா பேக்கில் 90மி.லி மது விற்க முடிவு - டாஸ்மாக் முக்கிய தகவல்! | Tasmac Explain Sell 90 Ml Liquor In Tetra Pack

90 மி.லி மதுவை டெட்ரா பேக்குகளில் விற்பதற்கான முயற்சியோ, கருத்துருவோ தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவில்லை. டெட்ரா பேக்கில் டாஸ்மாக் மது என செய்திகள் பரவிய நிலையில், இந்த நிமிடம் வரை அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.