ஒரு சொட்டு போதுமாம்.. 22 கோடிக்கு விற்கப்பட்ட 1 பாட்டில் விஸ்கி - அப்படி அதில் என்ன இருக்கு?
உலகின் காஸ்ட்லியான விஸ்கி 22 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மக்கல்லன் அடாமி
உலகின் மிகவும் விலை உயர்ந்த விஸ்கி என்று அழைக்கப்படும் மக்கல்லன் அடாமி 1926 (Macallan Adami 1926) சோதேபி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.
ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சோதேபி (Sotheby's) நியூயார்க் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த விஸ்கி பாட்டிலுக்கு நேரில் மட்டும் அல்லாமல் தொலைபேசியிலும் அதிகப்படியான ஆர்டர்கள் வந்துள்ளது.
22 கோடிக்கு ஏலம்
இந்நிலையில், இந்த விஸ்கி 22.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. 1986 இல் 40 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த விஸ்கி, 60 வருடங்கள் செர்ரி பேரலில் பதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரையில் ஒரு ஒயின் அல்லது மதுபான பாட்டில் இதுவரையில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டது இல்லை. புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜானி ஃபவுல், "இந்த ஒரு விஸ்கியைத்தான் உலகின் மது பிரியர்கள் ஏலத்தில் விற்கவும் விரும்புகின்றனர்; வாங்கவும் போட்டி போடுகின்றனர். இந்த மதுபானத்தின் சிறு துளியை நான் ருசி பார்க்க அனுமதிக்கப்பட்டேன்.
இது மிகவும் வளமையான விஸ்கி. எதிர்பார்த்ததை போலவே இதில் ஏராளமான உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் திடம் சிறப்பாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
40 பாட்டில்களையும் வெவ்வேறு வகையில் மெக்ஆலன் நிறுவனம் லேபிள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.