2வது திருமணத்திற்கு எதிர்ப்பு - மனைவிக்கு மொட்டை அடித்து தெருவில் இழுத்துச் சென்ற துணை நடிகர்!

Andhra Pradesh Crime
By Sumathi Feb 06, 2024 10:24 AM GMT
Report

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை, கணவன் தெருவில் இழுத்துச் சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது.

2வது திருமணம்

ஆந்திரா, பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33). ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக (துணை நடிகர்) உள்ளார். தன்னுடன் பணியாற்றும் ஆஷா(26) என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

rambabu - asha

இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ராம்பாபு தான் 2வது திருமணம் செய்யப்போவதாக மனைவியுடம் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவரை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

தகாத உறவில் இருந்த ஆசிரியை - தெரு தெருவாக இழுத்துச் சென்ற கணவன்

தகாத உறவில் இருந்த ஆசிரியை - தெரு தெருவாக இழுத்துச் சென்ற கணவன்

மனைவிக்கு கொடூரம்

இதனை தாங்கமுடியாமல் ஆஷா போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, ராம்பாபு பெற்றோர் மருமகளிடம் சமாதானம் பேசி வழக்கை வாபஸ் பெற செய்து சொந்த ஊருக்கு இருவரையும் அழைத்து வந்துள்ளனர்.

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு - மனைவிக்கு மொட்டை அடித்து தெருவில் இழுத்துச் சென்ற துணை நடிகர்! | Andhra Junior Artist 2Nd Marriage Wife Attack

அதன்பின் ராம்பாபு கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் மீண்டும் பழையபடி மனைவியை கொடுமைப் படுத்தியுள்ளார். அதனையடுத்து புகாரளித்து, கணவரை பிரிந்து ஆஷா தனியாக மகனுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் கணவருக்கு 2வது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துள்ளது.

இதையறிந்த ஆஷா, சட்டப்படி விவாகரத்து கேட்டு, கொடுத்த பணம் மற்றும் இழப்பீடு தொகையை வழங்க கேட்டுள்ளார். இதனை ஒப்புக்கொண்ட ராம்பாபு புகாரை வாபஸ் வாங்க கூறியுள்ளார். ஆனால், ஆஷா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரத்தில் ராம்பாபு, வீட்டிற்குள் இழுத்துச்சென்று ஆஷாவிற்கு மொட்டை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் தெரு, தெருவாக இழுத்து சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ராம்பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.